என்ன விலையழகே :- Lyrics :- Song by Unni Menon :- Tamil Song

என்ன விலையழகே :- Lyrics :- Song by Unni Menon :- Tamil Song

 

என்ன விலையழகே :- Lyrics :- Song by  Unni Menon :-  Tamil Song 



Song Lyrics :- 


என்ன விலையழகே...

என்ன விலையழகே

சொன்ன விலைக்கு வாங்க வருவேன்

விலை உயிரென்றாலும் தருவேன்

இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன்

ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்

ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்


என்ன விலையழகே

சொன்ன விலைக்கு வாங்க வருவேன்

விலை உயிரென்றாலும் தருவேன்

இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ


ஒரு மொழியில்லாமல்...

ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்

ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்


படைத்தான் இறைவன் உனையே

மலைத்தான் உடனே அவனே

அழகைப் படைக்கும் திறமை முழுக்க

உன்னுடன் சார்ந்தது என் விழி சேர்ந்தது


விடிய விடிய மடியில் கிடக்கும்

பொன் வீணை உன் மேனி

மீட்டட்டும் என் மேனி


விரைவினில் வந்து கலந்திடு

விரல்பட மெல்லக் கனிந்திடு

உடல் மட்டும் இங்கு கிடக்குது

உடன் வந்து நீயும் உயிர் கொடு


பல்லவன் சிற்பிகள் அன்று

பண்ணிய சிற்பத்தில் ஒன்று

பெண்ணென வந்தது இன்று சிலையே


பல்லவன் சிற்பிகள் அன்று

பண்ணிய சிற்பத்தில் ஒன்று

பெண்ணென வந்தது இன்று சிலையே

உந்தன் அழகுக்கில்லை ஈடு


என்ன விலையழகே

சொன்ன விலைக்கு வாங்க வருவேன்

விலை உயிரென்றாலும் தருவேன்

இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ


ஒரு மொழியில்லாமல்

ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்


உயிரே உனையே நினைந்து

விழிநீர் மழையில் நனைந்து


இமையில் இருக்கும் இரவு உறக்கம்

கண் விட்டுப் போயாச்சு காரணம் நீயாச்சு

நிலவு எரிக்க நினைவு கொதிக்க

ஆராத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு


தினம் தினம் உனை நினைக்கிறேன்

துரும்பென உடல் இளைக்கிறேன்

உயிர் கொண்டு வரும் பதுமையே

உனைவிட இல்லை புதுமையே


உன் புகழ் வையமும் சொல்ல

சிற்றன்ன வாசலில் உள்ள

சித்திரம் வெட்குது மெல்ல உயிரே


உன் புகழ் வையமும் சொல்ல

சிற்றன்ன வாசலில் உள்ள

சித்திரம் வெட்குது மெல்ல

நல்ல நாள் உன்னை நானும் சேரும் நாள்தான்


என்ன விலையழகே...

என்ன விலையழகே

சொன்ன விலைக்கு வாங்க வருவேன்

விலை உயிரென்றாலும் தருவேன்

இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ...


ஒரு மொழியில்லாமல்...

ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்

ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்

ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்


Watch this video :- 



Song by :-  Unni Menon




Post a Comment

0 Comments